close
Choose your channels

"I am back". அட்டகாசமாக ஆரம்பிக்கும் 'வேதாளம்' டீசர்? புதிய தகவல்

Sunday, October 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் டீசர் கடந்த வாரமே வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வரும் 8ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'வேதாளம்' டீசர் குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

'வேதாளம்' படத்தின் டீசர் 47 வினாடிகள் ஓடுவதாகவும், இந்த டீசரில் அஜீத் டுகாட்டி பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சி ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அஜீத் நடித்த 'பில்லா' படத்தில் 'I am back'' என்ற வசனம் அனைவரும் கவர்ந்தது என்பதை சொல்ல தேவையில்லை. அந்த வசனமும் இந்த டீசரில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த டீசரில் அட்டகாசமான அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளதாகவும், அஜீத்தின் படத்திற்காக அனிருத் கூடுதல் கவனத்துடன் இந்த படத்திற்கு அவர் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.