'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் தனது 60வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்ப்பாடல் உள்பட இரண்டு பாடல்களும், ஒருசில முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 25வரை நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பில் விஜய்-கீர்த்தி சுரேஷ் திருமணப்பாடல், விஜய்-அபர்ணா வினோத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்பட படக்குழுவினர் சுவிஸ் கிளம்ப தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் 2017 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாலியல் தொழிலாளி வேடத்தில் 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்ஷிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது அனைவரும் தெரிந்ததே...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தின் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

துப்பாக்கி, கத்தி உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'அகிரா' என்ற பாலிவுட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா...

விஜய் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள நெருக்கத்தை ஒருவர் மட்டுமே அறிவார். சிம்பு

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இது நம்ம ஆளு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உற்சாகமாகவுள்ள சிம்பு, அடுத்த பட வேலையை விரைவில் தொடங்கவுள்ளார்...

'பாகுபலி 2' படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமான திட்டம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்...

பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமரியாதையா? விரிவான தகவல்

1000 திரைப்படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா பெங்களூர்...