விஜய் 62: எங்கெங்கே எத்தனை நாள் படப்பிடிப்பு குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

தளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 62' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த இரண்டு படப்பிடிப்புகளுக்கு பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவரும்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.  க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. எந்திரன் படத்திற்கு பின்னர் இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள மண்ணின் மனத்துடன் கூடிய 'மதுரவீரன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்றிரவு சந்திக்கிறார் தல!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அதிகாரபூர்வமாக அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி: இயக்குநர் எம்.ஏ. நிஷாத்

கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' முதல் கோபி நயினார் இயக்கிய 'அறம்' வரை தண்ணீர் பிரச்சனையை அலசும் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இதே பிரச்சனையை அலசும் படம் 'கேணி'

வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சிப்பது அநாகரீகத்தின் உச்சம்: சரத்குமார்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியே தெரிவித்தார்.

ரஜினி, விஜய் படங்களுக்கு பின்னர் 'பத்மாவத்' படத்திற்கு கிடைத்த பெருமை.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கம் உலகிலேயே அதிக இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய, மிக பிரமாண்டமான தியேட்டர் என்பது அனைவரும் அறிந்ததே