close
Choose your channels

விஜய் 62: எங்கெங்கே எத்தனை நாள் படப்பிடிப்பு குறித்த தகவல்

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 62' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த இரண்டு படப்பிடிப்புகளுக்கு பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவரும்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.  க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. எந்திரன் படத்திற்கு பின்னர் இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.