ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் விஜய் நடிக்கும் படம்!

  • IndiaGlitz, [Sunday,July 10 2022]

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பதை பார்த்தோம். அதேபோல் தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க விஜய் ஒரே ஒருநாள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த காட்சியின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த காட்சியில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட விஜய் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் ஷாருக்கான் மற்றும் அட்லி உடனான நட்பின் அடிப்படையிலேயே நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அக்ஷய் குமார் நடித்த ’ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை பிரபுதேவா இயக்கிய போது அந்த படத்திலும் ஒரு பாடல் காட்சியில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துடன் போட்டோவில் இருப்பவர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

ஒரே ஒரு பிரமாண்ட வெற்றி: ரஜினியை பின்னுக்கு தள்ளிவிட்டாரா கமல்?

அண்டை மாநிலங்களில் 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎப் 2'  ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனை செய்துவரும் நிலையில் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகிய மாஸ் வசூல் நடிகர்கள்

100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்: யார் டாப் தெரியுமா?

தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்களின் சம்பளம் நூறு கோடி என்றும் கூறப்பட்டு

மருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீடியோ வெளியிட்டாரா விக்ரம்?

நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாரடைப்பு

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள், 'இவ்வளவு அழகாக கீர்த்தி சுரேஷ் பாடுவாரா