close
Choose your channels

இரட்டை வேடம் இல்லை.. அதுக்கும் மேல.. 'கோட்' படத்தின் ட்விஸ்ட்.. ரசிகர்கள் குஷி..!

Tuesday, May 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தில் அவர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக மகன் கேரக்டருக்கு டிஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்காக விஜய் சமீபத்தில் அமெரிக்கா சென்று அதற்கான காட்சிகளின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் இந்த படத்தில் இரட்டை வேடமல்ல, மூன்று வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட்டாக கருதப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய் ,அட்லீ இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்த நிலையில் அதன் பிறகு மீண்டும் அவர் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை, மகன் என்ற இரட்டை வேடங்களின் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் மூன்றாவது விஜய்யின் லுக் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். ஆனால் மூன்றாவது விஜய் லுக் கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கப்படும் என்றும், படம் பார்க்கும் போதுதான் அது அந்த லுக் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’கோட்’ திரைப்படத்தின் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கும்போது இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பாராத விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos