close
Choose your channels

விஜய்யின் மகள் ஜனனி, மகனாக நடிப்பது யார் தெரியுமா? 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட்..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் அவரது மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாக கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகனாக நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும் அவருடைய மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் மேத்யூ தாமஸ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அவர் இந்த படத்தில் விஜய்யின் மகனாக நடித்துள்ளதாகவும் அவரது தங்கையாக தான் ஜனனி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் மேத்யூ தாமஸ் ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment