விஷாலுடன் இணைந்த விஜய் ஆண்டனி

  • IndiaGlitz, [Wednesday,October 19 2016]

விஷால், தமன்னா, நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதே நாளில் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' தமிழை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனதால் 'சைத்தான்' படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இன்னொரு 'த்ரிஷ்யம்' ஆகிறது மோகன்லாலின் 'புலிமுருகன்'

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா

'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் விஜய்-அட்லி மேஜிக். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் அட்லியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கீர்த்திசுரேஷின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

'ரெமொ', 'பைரவா' நாயகி கீர்த்திசுரேஷ், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.