close
Choose your channels

விஷாலுடன் இணைந்த விஜய் ஆண்டனி

Wednesday, October 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், தமன்னா, நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதே நாளில் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' தமிழை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனதால் 'சைத்தான்' படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.