close
Choose your channels

'இப்ப இருந்து நான் சொல்றதை மட்டும் தான் நீ கேட்கணும்': விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' டிரைலர்

Sunday, December 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘தமிழரசன்’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி, சுரேஷ்கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், கஸ்தூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் த்ரில் காட்சிகள் அடங்கியுள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனி மிகவும் சிறப்பாக கதையை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் ‘தமிழரசன்’ படத்தின் கதையும் அதில் ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளில் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளது. அதேபோல் ரம்யா நம்பீசன் ராதாரவி ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. இந்த படம் நிச்சயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment