close
Choose your channels

4 தமிழ் இயக்குனர்களை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா.. 'குஷி'  டிரைலர் ரிலீஸ் விழாவில் சுவாரஸ்யம்..!

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தேவரகொண்டா, சமந்தா இயக்கத்தில் நடிப்பில் உருவான ‘குஷி’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா இன்று நடைபெற்ற நிலையில் சற்றுமுன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெற்றோர் எதிர்ப்பை மீறி விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளும் சமந்தா அதன் பின் அவருடன் ஒற்றுமையாக வாழ்ந்து காட்டினாரா? என்பதை குறிப்பிடும் கதைய அம்சம் கொண்ட இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி கதை அம்சம் கொண்டது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் விஜய் தேவரகொண்டா நான்கு பிரபல தமிழ் இயக்குனர்களை புகழ்ந்ததோடு அவர்களோடு பணி புரிய வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

குறிப்பாக தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்துள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் தனுஷ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் விஜய தேவரகொண்டா கூறியுள்ளார். மேலும் வெற்றிமாறன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர் என்றும் பா. ரஞ்சித் அவர்களின் அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் தான் சிறிய வயதில் இருக்கும்போது கௌதம் மேனனின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘குஷி’ டிரைலர் ரிலீஸ் விழாவில் அருண் மாதேஸ்வரன், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் கௌதம் மேனன் ஆகிய நான்கு இயக்கினர்களையும் விஜய் தேவரகொண்டா பாராட்டிய நிலையில் இவர்களுடைய இயக்கத்தில் அவர் எதிர்காலத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment