பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர செயலை செய்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நடிகர் நடிகைகள் உள்பட பலர் குரல் கொடுத்தனர். இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த நிதியுதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டார் என்பதும், சிறுமி ஜெயபிரியா குடும்பத்திற்கு திமுகழகம் சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை

'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்!

கௌதம் கார்த்திக், யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய அடல்ட் காமெடி திரைப்படமான ;இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படம்

வடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்!!! ரகசியங்கள் புதைந்த வெற்றிக்கதை!!!

இனம் கடந்து, மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் தனது உடல் மொழியால் ரசிக்க வைக்கும் ஒரு சிறந்த கலைஞராக, சிறந்த காமெடியனாக தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் சிறுவன் ஒசிட்டா ஐஹீம்.

2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்!

உலக நாயகன் நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

மீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்று 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ளது சற்று நிம்மதியை அளித்துள்ளது.