தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.. விஜயகாந்த், கமல் பாணியில் விஜய்?

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவ்வப்போது இந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் விஜய் தற்போது ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை முறைப்படி விஜய்யால் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்திய நிலையில், அவர்களது பாணியில் விஜய்யும் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரையில் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் விஜயகாந்த் பாணியில் விஜய் தனித்து தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

துணையை கண்டுபிடித்த விவாகரத்தான நடிகைக்கு திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!

விவாகரத்தான  மூன்று ஆண்டுகள் கழித்து துணையை கண்டுபிடித்ததாக சமீபத்தில் அறிவித்த நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த படம் 9 பாகங்களாக தயாராகிறதா? ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 9 பாகங்களாக திரையிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'லால் சலாம்' சக்சஸ் மீட்.. முக்கியமான ரெண்டு பேரை காணவில்லையே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் தற்போது நடந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் நடித்த இரண்டு முக்கிய பிரபலங்கள் இந்த சக்சஸ்

தமிழ் தேசிய அரசியல்னா என்ன? : மோகன் ஜீ கேட்ட கேள்விக்கு நச் பதில் கொடுத்த சீமான்

தமிழர்களுக்காகவும், தமிழ் நிலத்திற்காகவும் பேசும் அரசியலே தமிழ் தேசிய அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு நடிக்க வந்தேன் - பிரபல நடிகர் உருக்கம்

மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்ததாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.