close
Choose your channels

35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு நடிக்க வந்தேன் - பிரபல நடிகர் உருக்கம்

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்ததாக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

12th Fail திரைப்படத்தின் மூலம் இந்திய முழுவதும் பேசப்படும் நடிகராக உயர்ந்தவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே. இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் "என் தாய் நன்றாக சமைப்பார் என்பதால் ஒருமுறை என் நண்பர்களை வீட்டிற்க்கு அழைத்திருந்தேன். வந்தவர்கள் அழகாக இல்லாத சமையலறை, ஒழுகும் சீலிங் பிளாஸ்டிக் நாற்காலிகளை பார்த்து வந்த வேகத்தில் திரும்பி சென்று விட்டனர். அன்று தான் பணத்தின் மதிப்பு எனக்கு புரிந்தது. பின் தொலைக்காட்சியில் வேலை பார்த்து சொந்த வீடு வாங்கினேன். கடனையெல்லாம் அடைத்தேன். ஆனாலும், எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. மாதம் 35 லட்சம் ரூபாய் வரும் சம்பளத்தை விட்டு பிடித்த வேலையான படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்தேன். மொத்த சேமிப்பும் தீர்ந்து போனபோது என் மனைவி தான் எனக்கு உதவினார்" என நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.