close
Choose your channels

விஜய்யின் 'பீஸ்ட்' அரபிக்குத்து பாடலை பாடும் 'செல்லம்மா' ஜோடி!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடல் வரும் 14ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த பாடலின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை வெளியாக போகும் அரபிக்குத்து’ பாடலை பாடியது அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே ஜோடிதான் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ என்ற பாடலை பாடியவர்கள் என்பதும் அந்த பாடல் மிகப் பெரிய சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. எனவே அதே ஜோடி மீண்டும் பாடும் இந்த பாடல் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos