close
Choose your channels

விஜய்யின் 'பீஸ்ட்' ஆடியோ ரிலீஸ் தேதி இதுவா?

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஏற்கனவே சிங்கிள் பாடலான ’அரபிக்குத்து’ பாடல் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவலின்படி ‘பீஸ்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 20-ஆம் தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்தின் ஆடியோ ரிலீஸின் போதும் விஜய்யின் பேச்சு மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ‘பீஸ்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவிலும் அவர் கூறவுள்ள குட்டி கதை உள்பட சுவராசியமான பேச்சை கேட்க அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.