close
Choose your channels

'தளபதி 67' கெட்டப் இதுதானா? வேற லெவலில் விஜய்யின் மாஸ் புகைப்படம்!

Sunday, October 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் செய்திகளை விட ’தளபதி 67’ படத்தின் செய்திகள்தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ’தளபதி 67’ பட செய்திகளுக்கு விஜய் ரசிகர்களும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது திடீரென விஜய்யின் வேற லெவல் மாஸ் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ள நிலையில் இதுதான் ’தளபதி 67’ படத்தின் கெட்டப்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், பிரித்விராஜ், பகத் பாசில், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படம் லோகேஷின் முந்தைய படமான ’விக்ரம்’ வசூலை முறியடிக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி லோகேஷின் யுனிவர்ஸில் இன்னும் இணையப் போவது யார் யார் இணைய போகிறார்கள் என்ற ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று திர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.