close
Choose your channels

பாஜகவில் இணைந்தார் விஜய்யின் 'வாரிசு' பட நடிகை.. தேர்தலில் போட்டியா?

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார்.

கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா. குறிப்பாக கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அரங்கேற்றம்’ ’சொல்லத்தான் நினைக்கின்றேன்’ ’அபூர்வ ராகங்கள்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகை ஜெயசுதா கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைத்து செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து அவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்த நிலையில் தற்போது நான்காவது கட்சியாக பாஜகவில் இணைந்து உள்ளார்.

நேற்று தெலுங்கானா மாநில பாஜக பொறுப்பாளர் தருண் சுக் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். இந்த நிலையில் தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவர் மீண்டும் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment