ரூ.100 கோடி வசூலை தாண்டிய 'வாரிசு' - 'துணிவு': பொங்கல் வின்னர் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் இந்த படங்களின் நான்கு நாள் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் 100 கோடியை தாண்டி நான்காவது நாளில் 110 கோடியை அடைந்து விட்டதாகவும், துணிவு திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் ஆறாவது அஜித் படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூன்றாவது நாளே ரூ.103 கோடி வசூல் செய்த விஜய்யின் ’வாரிசு’ தற்போது 125 முதல் 130 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் மொத்தம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு ’வாரிசு’ படத்தின் வசூல் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் பொங்கல் நேரத்தில் குடும்பத்துடன் பார்க்கும் படம் என்பதால் இந்த படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றும் நாளையும் பொங்கல் விடுமுறை நாளாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு நாட்களின் வசூலையும் சேர்த்தால் மட்டுமே பொங்கல் வின்னர் யார் என்பது வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments