'மெர்சல்' டீசர், டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதுப்புது செய்திகள் தினமும் வெளிவந்து சமூக இணையதளங்களை பரபரப்பாக்குவதுடன் டிரெண்டிங்கிலும் உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள், இசை வெளியீட்டு விழா ஆகியவை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து கொண்டன.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது 'மெர்சல்' படத்தின் டீசருக்காகத்தான். இந்த படத்தின் டீசர் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று இயக்குனர் அட்லி இசை வெளியீட்டு தினத்தின்போது கூறியுள்ளதால் தற்போது டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டால் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த தகவலை சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதன்படி 'மெர்சல்' படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தயாராகி வருவதாகவும், வெகுவிரைவில் பின்னணி இசை, தீம் மியூசிக் இணைப்புகள் முடிந்தவுடன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் எந்த நேரத்திலும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோட்டையை நோக்கி நகரத் தொடங்கி விட்டோம்: கமல் அதிரடி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலமும் பேட்டிகள் மூலமும் தெரிவித்து வருகின்றார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட வில்லன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களுக்குத்தான் புதியதே தவிர இந்த நிகழ்ச்சி இந்தியில் 10 பாகங்களாகவும், கன்னடத்தில் நான்கு பாகங்களாகவும் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது...

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' டிராக்லிஸ்ட் இதோ

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'விக்ரம் வேதா' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான 'கருப்பன்' வெகுவிரைவில் வெளியாகவுள்ளது...

'மெர்சல்' படத்திற்கு போட்டியாகும் பெரிய ஹீரோ படம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் 'மெர்சல்'. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு பெரிய பட்ஜெட் படமும் அதே தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

'விவேகம்' விமர்சனங்கள் குறித்து அருண்காமராஜ் கூறியது என்ன தெரியுமா?

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு மிக அதிக அளவில் எதிர்மறை விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இதுகுறித்து கருத்து கூறி வந்ததை பார்த்தோம்.