110 பேர் வெற்றி: திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாவது இடம் விஜய்க்கா?   

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவை அடுத்து அதிக வெற்றி பெற்றுள்ளது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் என்பதால் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாரா? என்ற விமர்சனம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் அதனை அடுத்து அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 9 மாவட்ட ஊராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட 169 பெயர்களில் 110 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து திமுக அதிமுகவை அடுத்து மூன்றாவது இடத்தை விஜய் மக்கள் இயக்கம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாக போட்டியிட்டதால் அவர்கள் சுயேட்சை என்ற பட்டியலில் வந்தாலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் என்று பார்த்தால் மூன்றாவது இடம் பிடித்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

நாங்கள் ஒளிரும் நட்சத்திரம்… பாலிவுட் நடிகை வெளியிட்ட கிளாமர் புகைப்படம் வைரல்!

பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம்வருபவர் நடிகை ஆலியா பட். தயாரிப்பாளரின் மகளாக

அடிக்க அடிக்க நான் வந்துகிட்டே இருப்பேன்: அபிஷேக் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தங்களுடைய கதையை கதையை கூறி வருகிறார்கள் என்பதும் தாங்கள் சந்தித்த சவால்கள், நேர்ந்த துன்பத்தை உருக வைக்கும் அளவிற்கு தெரிவித்து வருகிறார்கள்

நாகேஷுக்கும் வாலிக்கும் சாப்பாடு போட்டவர் ஸ்ரீகாந்த்: சிவகுமாரின் நெகிழ்ச்சி பதிவு!

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமான நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு இரங்கல் தெரிவித்து

நடிகர் ஸ்ரீகாந்த் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'தங்கப்பதக்கம்' சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பைரவி' உள்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானதை அடுத்து திரை உலகம்

90 வயதில் பஞ்சாயத்து தலைவரான மூதாட்டி… எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி!

தமிழகத்தில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலுக்கான வாக்குகள் நேற்றுமுதல் எண்ணப்பட்டு வருகிறது