இந்திய ஊடகங்களுக்கு வேற வேலை இல்ல. ஜாமீன் பெற்றதும் கூறிய விஜய் மல்லையா

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு லண்டன் நீதிமன்றம் மூன்றே மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

விஜய்மல்லையாவின் கைது மற்றும் ஜாமீன் குறித்து கடந்த சில மணி நேரங்களாக இந்திய ஊடகங்களில் பரபரப்பான பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. மூன்று மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்தது எப்படி என்பது குறித்து சில தொலைக்காட்சிகள் விவாதங்களையும் தொடக்கிவிட்டது.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது: இந்திய ஊடகங்கள் வழக்கம்போல் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளன. ஏற்கனவே எதிர்பார்த்தது போலத்தான் இன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இன்று விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்பது அவருக்கு முன்பே தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் ஜாமீன் பெற்ற விஜய்மல்லையா

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்று, அதை திரும்ப கட்டாமல் கடந்த ஆண்டு லண்டனுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் இன்று அவர் ஸ்காட்லாந்துயார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்...

மீண்டும் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் நயன்தாரா

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகி விஜய்சேதுபதியை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்தான் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும்...

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சற்று முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

என் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன். மைனா நந்தினி

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே. கார்த்திக் தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும் சுரண்டிவிட்டீர்கள். இதையாவது விட்டு வையுங்கள். கவிஞர் தாமரை வேண்டுகோள்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. குறிப்பாக இன்றும் நாளையும் மதிய நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது...