close
Choose your channels

மீண்டும் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் நயன்தாரா

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகி விஜய்சேதுபதியை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்தான் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், விக்னேஷ் சிவனுக்கு சூர்யாவின் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், விஜய்சேதுபதி நடிக்கும் அவரது 25வது படமான 'சீதக்காதி' படத்தில் அவருக்கு ஜோடியே இல்லை என்றும், இந்த படத்தில் நாயகி இல்லாவிட்டாலும் பிரபல நடிகைகள் நடிகையாகவே இந்த படத்தில் தோன்றுவார்கள் என்றும் ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறு தோன்றும் நடிகைகளில் ஒருவர் நயன்தாரா என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ள இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மெளலி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.