close
Choose your channels

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா?

Saturday, October 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் தளபதி விஜய் திடீரென சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வரும் நிலையில் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடிகர் விஜய் தனது அலுவலகத்தில் நேற்று திடீரென மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது

முதல்கட்டமாக மதுரை, திருச்சி, குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று விஜய் சந்தித்ததாகவும் இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் அரசியலுக்கு வருவது குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிடாததால், ரஜினி ஒருவேளை அரசியலுக்கு வராவிட்டால் விஜய் அரசியல் களத்தில் இறங்குவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment