விபத்தில் காயமடைந்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது பல சம்பவங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. ரசிகர்களின் திருமணம் போன்ற சுபகாரியங்களில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும், விபத்து, மரணம் போன்ற துக்க காரியங்களில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவிப்பதிலும் விஜய் தவறுவதே இல்லை

அந்த வகையில் இன்று 'தளபதி 63' படப்பிடிப்பின்போது 100 அடி போக்கஸ் லைட் ஒன்று கிழே விழுந்ததால் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் அந்த ஊழியர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சற்றுமுன் சென்ற நடிகர் விஜய், அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படு வரும் சிகிச்சை குறித்த விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவரது நடிப்பை ரசிப்பதற்காக மட்டுமல்ல, அவரது மனிதநேயம், ரசிகர்கள் மீது அவர் காட்டும் அக்கறையே என்பது இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தெரிய வந்துள்ளது
 

More News

டிக் டாக் தடை சரியா? நடிகை கஸ்தூரி கருத்து

டிக்டாக் செயலியை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் 24க்குள் தீர்ப்பளித்து முடிக்க வேண்டும்

முன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா?

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் என்பவரை அவரது மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சூர்யா 39 படத்தில் இணையும் 'விஸ்வாசம்' டெக்னிக்கல் டீம்!

சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரஜினி, அஜித், விஜய் பட பிரபலம்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம்  வெளியாகவுள்ளது.

விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்! கதாநாயகியாக மாற்றிய ராஜமௌலி!

இயக்குனர் ராஜமவுலியை, விமான நிலையத்தில் சந்தித்த போது வாய்ப்பு கேட்டதாக நடிகை ஆலியாபட் தெரிவித்துள்ளார்...