விக்ரம் - பா ரஞ்சித் படத்தில் விஜய் பட நாயகியா? அப்ப ராஷ்மிகா இல்லையா!

விக்ரம் நடித்த ’கோப்ரா’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதன் பின்னர் படக்குழுவினர் தீபாவளி கொண்டாட சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் அவருடன் பேச்சு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகை மாளவிகா மோகனன் ஏற்கனவே விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் தனுஷ் நடித்த ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் பெரிய பட்ஜெட்டில் 3டி டெக்னாலஜியில் உருவாக்கப்படவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

More News

நயன்தாராவின் உண்மையான திருமண தேதி.. முடிவுக்கு வரும் வாடகைத்தாய் விவகாரம்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருடைய உண்மையான பதிவு திருமணம் 6 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததாக

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக சூர்யாவின் 2D நிறுவனம் வழங்கிய வாகனம்!

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம்

விஜய்சேதுபதியின் அடுத்த பட டீசர் எப்போது? இயக்குனர் தகவல்!

இந்தாண்டு விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' 'விக்ரம்' மற்றும் மாமனிதன் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை'

சர்தார்' - 'ஜவான்' ஒரே கதையா? 2 படத்தையும் எடிட் செய்யும் எடிட்டரின் பதிலடி பதிவு

கார்த்தி நடித்த 'சர்தார்' மற்றும் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே கதைதான் என திரைப்பட விமர்சகர் ஒருவர் கூறியதற்கு இந்த இரண்டு படங்களையும் எடிட்டிங்

பாதாம் தெரியுது, ஆதாம் தெரியலையா? ஜிபி முத்துவை கலாயத்த கமல்ஹாசன்!

'பாதாம் தெரியுது ஆதாம் தெரியவில்லையா? என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல்ஹாசன் கலாய்க்கும் காட்சியின் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளன.