close
Choose your channels

பொங்கல் திரைப்பட பட்டியலில் இணைந்த விஜய் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Tuesday, January 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொங்கல் விருந்தாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ அருண் விஜய் நடித்த ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

இந்த நான்கு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் அனைத்து படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நான்கு படங்களில் வசூல் அளவில் முதல் இடத்தை பெறும் படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க அவர் நடித்த ’லியோ’ திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் வரும் 15ஆம் தேதி சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆன ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரூ.500 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் பொங்கல் திருநாளை திருப்தியுடன் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.