close
Choose your channels

விஜய் பட வில்லன் நடிகரின் நிர்வாண புகைப்படங்கள்.. 'நான் யார்'என அறிய முயற்சிப்பதாக அறிவிப்பு..!

Sunday, December 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’நான் யார் என்பதை அறிய முயற்சிக்கும் ஒரு பகுதியாக ஒரு வாரம் இமயமலை காட்டில் இருக்கிறேன்’ என்று விஜய் படத்தில் நடித்த வில்லன் நடிகர் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’துப்பாக்கி’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகர் வித்யூத் ஜமால். இவர் தொடர்ச்சியாக இமயமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க நிர்வாணமாக இருப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விலகி சில நாட்கள் காட்டில் வாழ்ந்து வருகிறேன், என் தனிமையை கண்டு நானே மகிழ்ச்சி அடைகிறேன், நான் யார் என்பதை அறிய முயற்சிக்கும் ஒரு பகுதியாக இந்த பயணத்தை நான் நினைக்கிறேன், நான் யார் என்பதை அறிவதற்கான முதல் படி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இயற்கை வழங்கும் அமைதியான, ஆடம்பரங்கள் இல்லாமல், என்னை நானே தற்காத்துக் கொண்டேன். வெளியே நான் வசதியாக இருந்தாலும், இயற்கையான அதிர்வெண்ணுக்கு இசைவாக நான் இங்கு இருக்கிறேன். செயற்கைக்கோள், டிஷ் ஆன்டனாவாக என்னை நான் கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் கடந்த சில நாட்களாக இருக்கிறேன். என்னை சுற்றி நான் ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு வீடு திரும்ப இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை அனுபவிக்க தயாராக இருக்கிறேன். இந்த தனிமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்ற பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment