என் படத்தில் நீ நடிக்க வேண்டாம்.. நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் கூறிய விஜய்!

  • IndiaGlitz, [Saturday,November 05 2022]

’இனிமேல் நீ என் படத்தில் நடிக்க வேண்டாம்’ என நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் நடிகர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று வெளியான 4 படங்களில் ஒன்று சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்பதும் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவர் ஜெய் என்பதும் தெரிந்ததே. இந்த படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில மறக்க முடியாத விஷயங்களை கூறியுள்ளார்.

விஜய் நடித்த ’பகவதி’ திரைப்படத்தில் ஜெய் அவருடைய சகோதரர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் குறித்த மலரும் நினைவுகளை ஜெய் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

’பகவதி’ படத்தில் நடிக்கும் போது தான் பதட்டமாக இருந்ததாகவும் ஒரு சில காட்சிகளில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறிய ஜெய், அப்போதெல்லாம் விஜய் தனக்கு ஆறுதல் கூறுவார் என்று பயப்படாமல் நடி என்று தைரியம் அளிப்பார் என்றும் கூறினார்.

இந்த படம் ஹிட்டானதை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் ஹீரோவாக நடிப்பதில் நீ முயற்சி செய்ய வேண்டும் என்றும் என் படத்தில் நடிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் விஜய்யுடன் சரியான நேரத்தில் ஒரு படத்தில் நடிக்க நான் ஆர்வமுடன் காத்திருக்கின்றேன் என்றும் ஜெய் கூறினார். விஜய் படத்தில் தற்போது பல முன்னணி ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில் ஜெய்க்கும் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லிமிட் தாண்டிருச்சு, வர்றியா, இல்லையா? ரக்சிதாவை செல்லமாக மிரட்டும் ராபர்ட்: க்யூட் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராபர்ட் மற்றும் ரக்சிதாவின் க்யூட் காட்சிகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

என் மகனுடன் டேட்டிங் போறியா? அனு இமானுவேலிடம் கேள்வி கேட்ட ஹீரோவின் தந்தை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகைகளில் ஒருவரான அனு இமானுவேலிடம் பிரபல நடிகரின் தந்தை 'என் மகனை காதலிக்கிறாயா? அவருடன் டேட்டிங் செல்கிறாயா? என்று கேட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி

மைனா நந்தினியின் மாமன் மகனா இந்த பிக்பாஸ் போட்டியாளர்? முன்னாள் மனைவியின் புகைப்படம் வைரல்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் மைனா நந்தினியின் மாமன் மகனும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இளையராஜாவின் இசையை மட்டுமல்ல, இதையும் சுவைத்து பாருங்கள்: தங்கர்பச்சான்

இசைஞானி இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி சிறந்த பாடலாசிரியர் என்றும் அவருடைய இசையை மட்டுமே சுவைப்பவர்கள் அவருடைய பாடல் வரிகளையும் சுவைத்து பாருங்கள்

ரஜினியின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு 'லால் சலாம்' என்ற டைட்டில்