close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார்?

Saturday, November 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு ’லால் சலாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் லைகா நிறுவனம் இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த போஸ்டரில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘லால் சலாம்’ படத்தின் இசை அமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் என்றும், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவும் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பும் செய்ய உள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலை இயக்க பணியை ராமு தங்கராஜ் செய்ய உள்ளதாகவும் பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பு பணியை செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.