இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

இளையதளபதி விஜய் நடிக்கும் 61வது படம் குறித்து பல்வேறு செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தோம். இந்நிலையில் நாம் கூறிய அனனத்து செய்திகளும் இன்று இந்த படத்தின் அதிகாரபூர்வமான செய்தியாக வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது பெருமைக்குரிய 100வது படைப்பாக 'விஜய் 61' படத்தை தயாரிக்கின்றது. விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்களாக வடிவேலு மற்றும் சத்யன் ஆகியோர்களும், முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ் மற்றும்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்..
உதயா, அழகிய தமிழ்மகன் படங்களுக்கு பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கின்றார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். ரூபன் படத்தொகுப்பில், முத்துராஜ் கலை வடிவில், அனல் அரசுவின் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது.
மேலும் 'நான் ஈ', பாகுபலி உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்காக திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்குகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

More News

ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான புரட்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது

இணைவதற்கு முன் மோதலுக்கு தயாராகும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் படத்தை இயக்கவேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் அவ்வப்போது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்...

விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது...

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்....

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் 'அழகியே'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...