close
Choose your channels

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் 'அழகியே'

Tuesday, January 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அந்த சிங்கிள் பாடலின் துவக்க வார்த்தை வெளிவந்துள்ளது. 'அழகியே' என்று தொடங்கும் இந்த பாடல் காதலை மையமாக கொண்ட பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.