2 பெரிய படங்கள் ரிலீஸ்... விஜய்சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

விஜய் சேதுபதி நடித்த பாலிவுட் திரைப்படமான ’மெர்ரி கிறிஸ்மஸ்’ என்ற திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’மெர்ரி கிறிஸ்துமஸ்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக ஷாருக்கானின் ’டங்க்கி’ மற்றும் பிரபாஸின் ’சலார்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'தளபதி 68' படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்த காமெடி ஹீரோ..!

என்னையும் உங்கள் சகோதரர் பிரேம்ஜி போல் நினைத்துக் கொண்டு எனக்கு 'தளபதி 68' படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என காமெடி நடிகராக நடித்து தற்போது ஹீரோவான

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ.. லைகா அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 170'.

எங்க 2 பேருக்கும் ஈக்குவலாக பிளேயர் இருக்காங்களா? விசித்ராவின் கேள்வியால் சர்ச்சை..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது என்பதும் போட்டியாளர்களுக்குள்  வாக்குவாதமும்

பூஜை முடிந்ததும் அர்ச்சனா கல்பாத்தியின் பதிவு.. 'தளபதி 68' படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது திரைப்படமான 'தளபதி 68' படத்தின் பூஜை நேற்று நடந்தது என்ற செய்தியை பார்த்தோம். இந்த படத்தின் பூஜை குறித்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

விஜய்யின் 'தளபதி 68' படத்தில் இந்த 5 பிரபலங்கள் உறுதியா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை நேற்று நடந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும்  முதல் கட்டமாக இந்த படத்தில்