close
Choose your channels

 2 பெரிய படங்கள் ரிலீஸ்... விஜய்சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

Tuesday, October 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த பாலிவுட் திரைப்படமான ’மெர்ரி கிறிஸ்மஸ்’ என்ற திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’மெர்ரி கிறிஸ்துமஸ்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக ஷாருக்கானின் ’டங்க்கி’ மற்றும் பிரபாஸின் ’சலார்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ’மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.