close
Choose your channels

விஜய்சேதுபதி- பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

Thursday, November 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியீட்டு ’வாழ்த்துக்கள் மை ஹீரோ’ உங்களை போலீஸ் உடையில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ’டிஎஸ்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதி கம்பீரமாக பைக்கில் வரும் காட்சி இந்த போஸ்டரில் உள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

டி இமான் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் டிசம்பரில் வெளியாகவிருப்பதாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி’ ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’விக்ரம்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய படங்கள் வெளியா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது போல் ‘டிஎஸ்பி’ படமும் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment