சிபிஐ நயன், 6 கொலைகள், விஜய்சேதுபதி: இமாலய எதிர்பார்ப்பில் இமைக்கா நொடிகள்

  • IndiaGlitz, [Monday,May 29 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி கொண்டே வருகின்றது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் தற்போது இந்த படம் குறித்த வேறு சில தகவல்களை இயக்குனர் அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்
இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளதாகவும், இந்த கேரக்டருக்கு நயனை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் கூறிய இயக்குனர் அஜய்ஞானமுத்து, நயன்தாரா இந்த படத்தில் யாருக்கும் ஜோடியாக நடிக்காமல் சோலோவாக நடித்துள்ளதாக கூறினார்.
இந்த படத்தில் அடுத்தடுத்து ஆறு கொலைகள் நடப்பதாகவும், ஆறு கொலைகளும் நடக்கும் விதம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் ஆறுவிதமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் விஜய்சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், அவருடைய கேரக்டர் படத்திற்கு மிக முக்கியமானது என்றும் அஜய்ஞானமுத்து கூறியுள்ளார்.
நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் ஏற்படுத்திய ஆச்சர்யம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், சிக்ஸ்பேக், ரிஸ்கான, டூப் இல்லாத சண்டைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதாக அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

ரஜினி பட நடிகருக்கு மாவோயிஸ்ட்கள் அமைப்பு எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'.

'தளபதி 61' படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிந்தது

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் குண்டர் சட்டத்தில் கைது

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு மே 17 இயக்கம் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த அமைப்பினை சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என்பவர் தொடங்கி நடத்தி வருகிறார். தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டது....

'காலா' ஜீப்பை கண்டுபிடித்து கொடுங்கள்: மஹிந்திரா சேர்மன் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரையும், ஃபர்ஸ்ட்லுக்கையும் வைத்து ரசிகர்களும் நெட்டிசன்களும் தமிழீழம் உள்பட பல கற்பனைகளை அவிழ்த்துவிட்டனர்...