ரஜினி பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விருப்பமில்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்

விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் படத்தை இயக்கிய இயக்குனர், ‘ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விரும்பவில்லை என கூறியுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் மே 20 என ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ,சீனு ராமசாமி உள்பட படக்குழுவினர்களை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள், அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார். நன்றி ரஜினிகாந்த் அவர்களே’ என்று பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதி, காயத்ரி, லலிதா, குரு சோமசுந்தரம், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

வெறும் ராஜமெளலி அல்ல, மஹா ராஜமெளலி: 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்'  நேற்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியானது

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாயில் உள்ள ஏஆர் ரகுமானின் இசை ஸ்டூடியோவுக்கு சென்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

மாஸ்டர் நடிகரின் படத்திற்காக பாட்டு பாடிய ஜீவி பிரகாஷ் - சிவாங்கி!

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக ஜிவி பிரகாஷ் மற்றும் சிவாங்கி பாடிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 வது காதலுக்கு இடையூறு: ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய்!

ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் மூன்றாவது காதலனுக்கு பிறந்த ஒரு வயது குழந்தையை மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய் ஒருவர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆரை இணைத்த ராஜமெளலி, ரஜினி-கமலை இணைப்பாரா? மாஸ் தகவல்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்த சாதனையை ராஜமௌலியை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது