close
Choose your channels

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

Tuesday, May 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு பிரபல நடிகருக்கும் 50 வது படம் என்பது ஒரு முக்கியமான மைல்கல் என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் 50 வது படமான ’மகாராஜா’ திரைப்படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ’குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment