இரண்டாம் பாகம் தயாராகிறதா விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம்: பரபரப்பு தகவல் 

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்த திரைப்படம் ’தர்மதுரை’. கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து இது குறித்த தனது மலரும் நினைவுகளை இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூக வலை பக்கத்தில் தெரிவித்திருந்தார். ராதிகா உட்பட பலர் இயக்குனர் சீனுராமசாமிக்கு நன்றி தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடித்திருந்தவரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’தர்மதுரை 2’ பிளான் பண்ணலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆர்கே சுரேஷின் கோரிக்கையை ஏற்று விரைவில் ’தர்மதுரை 2’ படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.