விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள ’துக்ளக் தர்பார்’ ’கடைசி விவசாயி’ ’மாமனிதன்’ ’லாபம்’ ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மேலும் அவர் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ வெற்றிமாறன் இயக்கும் சூரி திரைப்படம் உள்பட சுமார் அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று லோகேஷ் கனகராஜ் தமிழில் இயக்கிய ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ’மும்பைகார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இந்த திரைப்படத்தில் ’மாநகரம்’ படத்தில் முனிஷ்காந்த் நடித்த வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மேலும் விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் தன்யா மனிக்தலா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குழந்தை நட்சத்திரமாக நடித்த டிவி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? ரசிகர்கள் ஆச்சரியம்!

பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சுஜிதா. அதன்பின்னர் தொலைக்காட்சி சீரியல்களிலும்

சீனியரை முந்திய ஜூனியர்...! குமரியில் விஜய்வசந்துக்கு குவியும் ஆதரவுகள்...!

காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் விஜய்வசந்த் காலில் வீக்கமிருந்தும், மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திமுக வேணாம் போடா ...! நடிகை கவுதமி காரசார ட்வீட்...!

பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினருக்கு அரசியலில் இடமில்லை என்று நடிகை கவுதமி காரசாரமாக பதிவிட்டுள்ளார். 

கமல் யாரையும் அடிக்கவில்லை...!செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த ஸ்ரீபிரியா...!

கமல் டார்ச்-லைட்டால் அடிப்பது போன்ற உள்ள வீடியோ சித்தரிக்கப்பட்டது என மக்கள் நீதி மய்யத்தின் நட்சத்திர பேச்சாளர் ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன: கமல்ஹாசன்

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன என கமல்ஹாசன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்