கே.வி.ஆனந்த் - விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,January 03 2017]

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
'மாற்றான்', 'அனேகன்' படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஜிஎஸ் நிறுவனமும் கே.வி.ஆனந்த் அவர்களும் இணைந்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் டி.ராஜேந்தரும் முதல்முதலில் இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் படக்குழுவினர்களின் நெருக்கமானவர்களிடம் இருந்து தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகும் என்றும் சரியான தேதி இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். பிரபல நடிகர் ஆவேச பேட்டி

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையின்...

ரமேஷ் திலக்கை கடவுள் எனக்காகவே அனுப்பியுள்ளார். நவலட்சுமி

பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், எப்.எம் ரேடியோ ஆர்ஜே நவலட்சுமியை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும்...

ஆன்லைனில் பாடம் படித்து அறுவடை செய்த நபருக்கு சிறைத்தண்டனை

இன்றைய டெக்னாலஜி உலகில் பெரிய பெரிய படிப்புகளையும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் படிக்கும்...

'டார்லிங்' நிக்கிகல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் மிகக்குறைந்த காலத்தில் முன்னணி நடிகையான நடிகை நிக்கி கல்ராணி...

விஜய்யின் 'பைரவா'வுக்குத்தான் முதலிடம். ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படமும், ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ் லீ' திரைப்படம் வரும் பொங்கல்...