close
Choose your channels

கே.வி.ஆனந்த் - விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் தேதி

Tuesday, January 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
'மாற்றான்', 'அனேகன்' படங்களின் வெற்றிக்கு பின்னர் ஏஜிஎஸ் நிறுவனமும் கே.வி.ஆனந்த் அவர்களும் இணைந்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் டி.ராஜேந்தரும் முதல்முதலில் இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் படக்குழுவினர்களின் நெருக்கமானவர்களிடம் இருந்து தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகும் என்றும் சரியான தேதி இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், தமிழரசன், ஜெகன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.