சத்யம் சினிமா வளாகத்தில் விஜய்சேதுபதியின் சாதனை

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட மாதம் ஒன்று வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்று ஓடி வருவதால் இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவர் படங்களுக்கு கிடைத்துள்ளது.
விஜய்சேதுபதியின் தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதனையடுத்து அவர் நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஒரு மாத இடைவெளியில் அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி வெளியானது. அக்டோபர் 7ஆம் தேதி அவர் நடித்த 'றெக்க' ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் 'றெக்க' படமும் திரையிடப்படவுள்ளது.
இந்த திரையரங்க வளாகத்தின் சரித்திரத்தில் ஒரே நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் திரையுலகில் நடிகர்களே இல்லாத முதல் தமிழ் படம்

தமிழ் திரையுலகில் ஜோதிகா நடித்த 'சினேகிதியே' திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே ஆண் பாத்திரங்கள்

விஜய்க்கு இது வேற லெவல் படம். 'பைரவா' ஒளிப்பதிவாளர் சுகுமார்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள்...

மனோபாலாவின் 'பாம்பு சட்டை' வியாபாரம்

பிரபல இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா, 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை முதன்முதலில் தயாரித்து தானும்...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரன்னிங் டைம்

சிவகார்த்திகேயன் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'ரெமோ' வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

சிவாஜி பேரனின் 'மீன்குழம்பும் மண்பானையும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஆரம்பித்துள்ள புதிய தயாரிப்பு நிறுவனமனான ஈஷான் புரடொக்ஷன்ஸ்...