close
Choose your channels

சத்யம் சினிமா வளாகத்தில் விஜய்சேதுபதியின் சாதனை

Monday, October 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட மாதம் ஒன்று வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வசூலை பெற்று ஓடி வருவதால் இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவர் படங்களுக்கு கிடைத்துள்ளது.
விஜய்சேதுபதியின் தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதனையடுத்து அவர் நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஒரு மாத இடைவெளியில் அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி வெளியானது. அக்டோபர் 7ஆம் தேதி அவர் நடித்த 'றெக்க' ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் 'றெக்க' படமும் திரையிடப்படவுள்ளது.
இந்த திரையரங்க வளாகத்தின் சரித்திரத்தில் ஒரே நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.