விக்ராந்த் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவருடைய கால்ஷீட் டைரி இரண்டு வருடங்களுக்கு நிரம்பி இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் நடிப்பில் அவருடைய சகோதரர் சஞ்சீன் இயக்கும் படத்திற்குத்தான் விஜய்சேதுபதி திரைக்கதை வசனம் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சஞ்சீவ் கூறியதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா...?என கேட்டார். அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார்.

சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.. அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை. விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம். ’ என்றார் இயக்குநர் சஞ்ஜீவ்

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

More News

புதிய காட்சிகள் இணைப்பு: வடசென்னை குழுவினர் தகவல்

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை திருநாளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

'மீடூ' குறித்து லதா ரஜினிகாந்த் கூறிய கருத்து

தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கி வைத்த மீடூ விவகாரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கி தினமும் பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

கார்த்தியின் 17வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் செகண்ட்லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் சற்றுமுன் கார்த்தி நடித்து வரும் 17வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்

20 தொகுதிகள் இடைத்தேர்தலை கமல்-ரஜினி பயன்படுத்துவார்களா?

இன்று காலை வெளிவந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற பரபரப்பான தீர்ப்பை 3வது நீதிபதி அளித்தார்.

15 வயதில் பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணியின் மீடூ குற்றச்சாட்டு

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தனக்கு 15 வயது இருக்கும்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா அவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.