விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 30 2016]

'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் மட்டும் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'சேதுபதி' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.


முதன்முதலாக விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ள 'சேதுபதி' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சற்று முன்னர் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். தினேஷ்குமார் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வான்சன் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே.ப்ரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் கடந்த 20ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதன்முதலாக சூர்யாவுடன்

'அரண்மனை 2' முதல் நாள் முதல் காட்சியில் குஷ்பு-த்ரிஷா

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் ரிலீசாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

விஜய் ரசிகர்களுக்கு சவால் விடும் 'தெறி' டீசர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் 50 வினாடிகள் டீசர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'புலி' நடிகை

சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'கான்' படம் டிராப் ஆனதை அடுத்து செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படமான ...

த்ரிஷாவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியது ஏன்?

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா நடித்த 'அரண்மனை 2'...