விஜய்சேதுபதியின் சைலண்ட் படம்: வேறு யார் யாரெல்லாம் இருக்காங்க?

விஜய் சேதுபதி நடித்து வரும் சைலண்ட் படம் ஒன்று உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல மராத்தி இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’காந்தி டாக்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வசனமே இல்லாத டார்க் காமெடி படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜீடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆணடு ‘பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத சைலண்ட் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'எல்லாத்தையும் தின்னு முடிச்சிட்டு இப்ப மனுசக்கறியா? 'பவுடர்' டிரைலர்

நிகில் முருகன் நடிப்பில் உருவான 'பவுடர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தின் 'துணிவு' படப்பிடிப்பு முடிவது எப்போது? ரிலீஸ் இந்த தேதியில் தான்!

அஜித் நடித்துவரும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்.. பிக்பாஸ் இந்த சீசன் ஃபுல்லா விஜய் டிவி புரடொக்ட்ஸ் தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக இருந்த நிலையில் 6வது சீசன் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே.

நீச்சல் குளத்தில் கண் சிமிட்டும் பிரியா வாரியர்: செம ஹாட் புகைப்படங்கள்!

'ஒரு ஆதார் லவ்' என்ற மலையாள படத்தில் நடித்த பிரியாவாரியர் ஒரே ஒரு கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது

'லத்தி' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட விஷால்: வீடியோ வைரல்

விஷால் நடித்த 'லத்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் மாஸ்