கமல் பாடலை சமந்தா, நயன்தாராவுக்காக பாடிய விஜய்சேதுபதி!

கமல்ஹாசன் நடித்த ’குணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன் நான் உனக்கு’ என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தாவுக்காக பாடியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த  படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படத்தில் ராம்போ என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன் நான் உனக்கு’ என்ற பாடலை கண்மணி மற்றும் கதீஜா என்ற நயன்தாரா மற்றும் சமந்தாவின் கேரக்டர்களை குறிப்பிடும்படி மாற்றி ஜாலியாக பாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, நயன்தாரா , சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், சீமா, ரெடின்கிங்ஸ்லி, உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்படி செஞ்சா எந்த பொண்ணுக்குத்தான் பிடிக்காது? நயன்தாராவை அசத்திய விக்னேஷ் சிவன்!

உலகில் உள்ள எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகிற கணவர் அல்லது கணவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களோ, அதனை விக்னேஷ் சிவன் செய்துள்ளதை அடுத்து

டிரைலர் வெளியாகும் முன் 'பீஸ்ட்' குழுவினர் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசிகர்கள் குஷி!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் 'பீஸ்ட்' படக்குழுவினர் டுவிட்டரில் 'பீஸ்ட்'

மனோபாலாவுக்கு ஜோடியாகிறாரா அஜித் பட நாயகி?

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தற்போது மனோபாலா ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

அஜித்தின் 'வலிமை' திரைப்படத்தின் மகத்தான சாதனை: ரசிகர்கள் கொண்டாட்டம்!

'வலிமை' படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது

இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது: 'பீஸ்ட்' டிரைலர்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிடங்கள் இருக்கும்