close
Choose your channels

கமல் பாடலை சமந்தா, நயன்தாராவுக்காக பாடிய விஜய்சேதுபதி!

Sunday, April 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ’குணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன் நான் உனக்கு’ என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தாவுக்காக பாடியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த  படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படத்தில் ராம்போ என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன் நான் உனக்கு’ என்ற பாடலை கண்மணி மற்றும் கதீஜா என்ற நயன்தாரா மற்றும் சமந்தாவின் கேரக்டர்களை குறிப்பிடும்படி மாற்றி ஜாலியாக பாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, நயன்தாரா , சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், சீமா, ரெடின்கிங்ஸ்லி, உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.