ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ரஜினிக்காகவா? அல்லது கதைக்காகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, 'இன்னும் அந்த படத்தின் கதை என்னவென்றே எனக்கு தெரியாது. திரையுலகில் நான் ஒருசிலர்களை முழுவதுமாக நம்புவேன். அவர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவரை எனக்கு பர்சனலாகவும், இயக்குனராகவும் நன்கு தெரியும். எனவே அவர் நடிக்க கூப்பிட்டால் உடனே ஒப்புக்கொள்வேன்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பை இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த நான், அவர் நடிப்பை நேரில் பார்க்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் விஜய்சேதுபதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத  இழப்பு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேல் அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம்: விஜய்சேதுபதி

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது.

பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது

தலைமை செயலகத்தில் தர்ணா: மு.க.ஸ்டாலின் கைது

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் சென்றார்.